TNHB Tulip Towers, வரகனேரி திருச்சி — 56 பன்னடுக்குமாடி குடியிருப்பு (அறிவிப்பு 02/2026)
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) வரகனேரி, திருச்சியில் 56 அலகுகள் கொண்ட Tulip Towers திட்டம் — HIG 23 அடுக்குமாடி குடியிருப்புகள், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இணையதள விற்பனை.
அறிவிப்பு எண்
02/2026 (04.06.2026)
இருப்பிடம்
வரகனேரி, திருச்சி
மொத்த அலகுகள்
56 (Stilt + 14 தளங்கள்)
விற்பனைக்கு
23 HIG அடுக்குமாடி குடியிருப்புகள்
பரப்பளவு
1518 – 1576 சதுர அடி
விற்பனை விலை
₹76 லட்சம் – ₹79 லட்சம்
திட்ட விவரங்கள்
திருச்சியின் முதன்மையான இடமான வரகனேரியில் அமைந்துள்ள TNHB Tulip Towers, மொத்தம் 56 அலகுகள் கொண்ட பன்னடுக்குமாடி குடியிருப்பு திட்டம் (Stilt + 14 தளங்கள், மொத்த திட்டப் பரப்பளவு 9 கிரவுண்ட்).
இதில் உயர் வருவாய் பிரிவைச் (HIG) சேர்ந்த 23 அடுக்குமாடி குடியிருப்புகள், "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" (FCFS) என்ற அடிப்படையில் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
அலகு விவரங்கள்
| வகை | அலகுகள் | பரப்பளவு (சதுர அடி) | பிரிக்கப்படாத நிலப் பங்கு | விற்பனை விலை |
|---|---|---|---|---|
| HIG | 23 | 1518 – 1576 | 494 – 513 சதுர அடி | ₹76 L – ₹79 L |
தகுதி நிபந்தனைகள்
- விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.
- 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடமிருந்து தனது / கணவர் / மனைவி / மைனர் குழந்தைகள் பெயரில் ஏற்கனவே மனை, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியிருக்கக் கூடாது.
- HIG பிரிவுக்கு மாத வருமானம் ரூ.70,000/-க்கு மேல் இருக்க வேண்டும்.
முக்கியமான தேதிகள்
| வ. எண் | நிகழ்வு | நாள் |
|---|---|---|
| 1 | இணையதள விண்ணப்ப செயல்முறை தொடக்கம் (காலை 10:00 மணி) | 05-06-2026 |
| 2 | இணையதள விண்ணப்ப செயல்முறை முடிவு | 31-03-2027 |
கட்டணம் & செலுத்தும் முறை
பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஆரம்ப தொகை + விண்ணப்பக் கட்டணம் + பதிவு கட்டணத்தை ஒரே பரிவர்த்தனையில் (Internet Banking / Debit Card / IMPS) செலுத்த 20 நிமிட அவகாசம் வழங்கப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் மீதமுள்ள 90% தொகையை TNHB மின்-சேவை தளம் அல்லது மின்-சலான் மூலம் செலுத்த வேண்டும்.
| வகை | ஆரம்ப தொகை (10%) | விண்ணப்பக் கட்டணம் (GST உட்பட) | பதிவு கட்டணம் |
|---|---|---|---|
| HIG | ₹7,58,500 – ₹7,87,000 | ₹590 | ₹200 |
வசதிகள் & பாதுகாப்பு
- 24/7 மின் காப்பு வசதிகள்
- 24/7 குடிநீர் வசதி
- நிலத்தடி வடிகால் வசதிகள்
- மின்தூக்கி மற்றும் மின்தூக்கிக்கான மின் காப்பு
- கலப்பு சமூகம் (Mixed community)
- தீயணைப்பு ஏற்பாடுகள்
- மின்னல் தடுப்பான் வசதி
இருப்பிட நன்மைகள்
- திருச்சி – சென்னை நெடுஞ்சாலை (NH-38) நடந்து செல்லும் தூரம்
- காந்தி மார்க்கெட்டிற்கு 1.0 கி.மீ
- மத்திய பேருந்து நிலையம் & ரயில் நிலையத்திற்கு 4.0 கி.மீ
4S Reality பார்வை
வரகனேரி என்பது திருச்சியின் மைய நகர்ப்புற மண்டலம் — ரயில் நிலையம், காந்தி மார்க்கெட், NH-38 அணுகல் காரணமாக வாடகை தேவை (rental demand) நிலையானது. TNHB திட்டம் என்பதால் சட்டப்பூர்வ ஆவணம் & RERA பதிவு தெளிவாக உள்ளது — முதல் முறை வாங்குபவர்களுக்கு குறைந்த ஆவண ரிஸ்க்.
ஆனால் ₹76–79 லட்சம் என்பது apartment பிரிவு — நில முதலீட்டுடன் ஒப்பிடும்போது appreciation வேகம் குறைவாக இருக்கும். சொந்த குடியிருப்புக்கு (self-use) சிறந்தது; pure appreciation இலக்காக இருந்தால் நமது வளர்ச்சி மண்டல மனை விருப்பங்களை ஒப்பிட்டு பாருங்கள்.